சபரிமலை கோவில் தந்திரியாக இருந்தவர் திரு.கண்டரரு மோகனரு. இவரை 6 பேர் கொண்ட ஒரு கும்பல் கொச்சியில் உள்ள லிங்க் லட்சுமண் வளாக பிளாட் கட்டிடத்தில் அழகி சாந்தாவுடன் வைத்து ஆபாச படம் எடுத்ததாகவும், அந்த படங்களை வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதுடன், தனது நகை மற்றும் பணத்தை பறித்து சென்றதாகவும் தந்திரி மோகனரு அளித்த புகாரின் பேரில் போலீசார் அழகி ஷோபா, டிரைவர்கள் விஜில், அனில் குமார் மற்றும் பிஜி பீட்டர், அப்துல் சகத், ஆஷிப் ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கில் தந்திரியை ஆபாச படம் எடுத்ததாகக் கூறி, காசர்கோடு சிறுவத்தூரை சேர்ந்த போட்டோ கிராபர் அப்துல் சத்தாரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். "தந்திரி மோகனருவை அழகி சாந்தாவுடன் நான் தான் ஆபாச படம் எடுத்தேன்" என்று அப்துல் சத்தார் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களிடம் போலீசார் முன்னிலையில் கூறினார்.
இவரது புகைப்படத்தை செய்திகளில் பார்த்த கண்டரரு மோகனரு, "தன்னை ஆபாச படம் எடுத்தவர் அப்துல் சத்தார் அல்ல" என்று மறுத்துள்ளார். நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி அவர் கூறியதாவது:-
"அப்துல் சத்தாரின் படங்களை தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் பார்த்தேன். கொச்சி பிளாட் கட்டிடத்தில் என்னை மிரட்டி ஆபாச படம் எடுத்ததாக போலீசார் கைது செய்துள்ள போட்டோ கிராபர் அப்துல் சத்தார் உண்மையான குற்றவாளி அல்ல. அவர் என்னை படம் எடுக்கவில்லை."
"போலீசார் கைது செய்துள்ள போட்டோ கிராபர் அப்துல் சத்தார், சம்பவத்தன்று என்னை தாக்கி படம் எடுத்த கூலிப்படையினர் கூட்டத்தில் இருக்கவில்லை. அந்த கூலிப்படையினரை எங்கு பார்த்தாலும் என்னால் கண்டறிய முடியும். அப்துல் சத்தார் போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படும் தகவல்களும் உணமையல்ல. இந்த வழக்கை சில போலீஸ் அதிகாரிகள் திசைதிருப்பி விட்டுள்ளனர்." என்று திரு. கண்டரரு மோகனரு கூறினார்.
டெய்ல்பீஸ்: வரவர இந்த கண்டரரால் மிகப்பெரிய தலைவேதனையாகி விட்டது. எப்படியாவது இந்த வழக்கை முடித்து தலைசுற்றி வீசிவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என நினைத்தால் விட மாட்டார் போலிருக்கிறது. இவர் இடையிடையே இப்படி பேசுவதைப்பார்த்தால் கடைசியில் உண்மையான குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய நிலை வந்து விடும் போல் உள்ளதே. அவர்களை காட்டிக்கொடுத்து விட்டால் அதன் பின் நமக்கு படியளப்பது யாராம்?
Saturday, September 30, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//வரவர இந்த கண்டரரால் மிகப்பெரிய தலைவேதனையாகி விட்டது.//
வரவர இந்த நிருபர்களால் மிகப்பெரிய தலைவேதனையாகி விட்டது. :-)
Post a Comment