ஒரு பெண்ணை மானபங்கப்படுத்திய வழக்கில் பிரபல பாலிவுட் நடிகனும் பாராளுமன்ற எம்.பியுமான நடிகர் கோவிந்தாவின் சகோதரன் மகன் ஜன்மேந்திரா அஹூஜாவை காவல்துறை கைது செய்தது. இவருடன் மூன்று நண்பர்களும் காவல்துறை பிடியில் உள்ளனர். மஹாராஷ்டிரா சிவில் சப்ளைஸ் அமைச்சராக இருக்கும் சுனில் தத்கரின் அந்தரங்க உதவியாளராக பணிபுரியும் தயானந்த் சிங்கோலிகரின் மனைவி சீமா சிங்கோலிகரை ஜன்மேந்திரா மற்றும் அவரின் மூன்று நண்பர்கள் இணைந்து மானபங்கப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 20 ஆம் தேதி இரவு ஜூஹு கடற்கரையில் தயானந்தும் அவர் மனைவியும் அமர்ந்திருக்கும் பொழுது சம்பவம் நடைபெற்றதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. ஜன்மேந்திராவும் நண்பர்களும் தயானந்தின் மனைவியை மானபங்கப்படுத்த முயலும் பொழுது தடுக்க வந்த தயானந்தை கொடூரமாக தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜன்மேந்திரா சினிமா தயாரிப்பாளர் கீர்த்தி அஹூஜாவின் மகன் ஆவார். ஜன்மேந்திராவையும் அவர் கூட்டாளிகளையும் இம்மாதம் 27 ஆம் தேதி வரை காவல்துறை கஷ்டடியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெய்ல்பீஸ்: நடிகர் கொவிந்தாவின் புகழை கெடுத்து அவருக்கு அவப்பெயர் உருவாக்க எதிர்கட்சியினர் செய்த சதியாக இருக்கும். காவல்துறையும் நீதித்துறையும் அதற்கு துணைப்போவது வெட்கக்கேடு!
Monday, September 25, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment