Saturday, September 30, 2006

எயிட்சை தடுக்க நீதிபதி புது யோசனை!

"கைதிகளை திருத்துதல், சீர்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு அளித்தல்" என்பது பற்றிய கருத்தரங்கு பெங்களூரில் நடந்தது. இதில் கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி வி.கோபால கவுடா கலந்து கொண்டு பேசினார். கைதிகளின் நலனை குறித்தும் அவர்களின் மறுவாழ்வைக் குறித்தும் நீதிபதி கூறும் பொழுது,

"சிறையில் உள்ள கைதிகள் நீண்ட காலமாக தங்களின் குடும்பத்தினரை பிரிந்து தனிமையில் வாழ வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு அவர்கள் ஆளாகின்றனர். இது அவர்களை ஓரின சேர்க்கை செய்ய தூண்டுகிறது. இதனால் கைதிகளிடையே எய்ட்ஸ் நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. இதனை தவிர்க்க, கைதிகளை பரோலில் விடவேண்டும்.

கைதிகள் தங்களது குடும்பத்தினர்களை அடிக்கடி சந்திக்க அனுமதிக்க வேண்டும்.சிறைகள் மற்றும் காவல்கூடங்களுக்கு அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எய்ட்ஸ் மற்றும் ஓரினசேர்க்கையால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள், மனநோய் ஆலோசகர்களை நியமிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்.இத்தகைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சமூகவியல் நிபுணர்களின் ஆலோசனையை நாடவேண்டும்." என்று நீதிபதி வி.கோபால கவுடா ஆலோசனை கூறினார்.

டெய்ல்பீஸ்: ஹைய்யா. ஜாலி தான். ஓசி சாப்பாடு, ஓசி தங்குமிடம், குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்ற தலை வேதனை இல்லை, அப்படியே குடும்பமும் நடத்திக் கொள்ளலாம். இனி நமக்கு ஒரே ஜாலி தான். நீதிபதி ஐயா அப்படியே தமிழ்நாட்டுல செயலலிதா அம்மா அறிவித்த இலவச நிரோத் மெஷின் ஒண்ணையும் ஜெயிலுக்குள்ள எங்களுக்கு வச்சுத் தரச்சொல்லிடுங்க ஐயா. உங்களுக்கு புண்ணியமா போகும்.

No comments: