நியூயார்க் : அல் காயிதாவை அழிப்பதற்கு தான் தயார் செய்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதில் புஷ் அரசு தோல்வி அடைந்து விட்டது என்ற பில் கிளிண்டனின் அறிக்கை உண்மைக்கு புறம்பானது என கோண்டலீஸா ரைஸ் கூறினார்.
கடந்த ஞாயிறு அன்று ஃபோக்ஸ் சானலுக்கு வழங்கிய பேட்டியின் போது கிளிண்டன் இவாறு தெரிவித்திருந்தார். பின்லாடனை பிடிப்பதற்காக மிகச் சிறந்த திட்டம் ஒன்றை தயார் செய்தது நான் தான் என்பது தான் பில் கிளிண்டனின் வாதம். செப்.11 தாக்குதல் நடந்த காலத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ரைஸ் பணியாற்றிக் கொண்டிருந்தார். அல்காயிதாவின் செயல்பாட்டை முடக்குவதற்கான எவ்வித திட்டமும் அன்று தனக்கு கிடைக்கவில்லை என ரைஸ் நியூயார்க் டைம்ஸிற்கு அளித்த பேட்டியில் கூறினார். அவ்வாறெனில் கிளிண்டன் பொய் கூறுகிறாரா? என்ற கேள்விக்கு தான் அவ்வாறு கருதவில்லை என அவர் பதிலளித்தார்.
டெய்ல்பீஸ் : ஒருவேளை கிளிண்டன் தயார் செய்த அந்த திட்டம் அடங்கிய கோப்பு லெவின்ஸ்கியின் குளியலறையிலை விட்டு வெளிவரவில்லையோ என்னமோ. எதற்கும் கிளிண்டன் ஒருமுறை லெவின்ஸ்கியின் படுக்கையறையில் அக்கோப்பை தேடிப்பார்த்து உறுதி செய்து கொள்ளட்டும்.
Tuesday, September 26, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
யப்பா நிருபா,
//எதற்கும் கிளிண்டன் ஒருமுறை லெவின்ஸ்கியின் படுக்கையறையில் அக்கோப்பை தேடிப்பார்த்து உறுதி செய்து கொள்ளட்டும்.//
பயங்கர லொள்ளுய்யா உமக்கு..
context இல்லாமல் நன்றாக உளறுகிறீர்.
க்ளின் டன் நிருபரை போட்டு காய்ச்சியதை எடுத்து போவது தானே?
Post a Comment