சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: சினிமா இன்டஸ்டிரியில் திண்டாட்டம் தான் அதிகம். பத்து பேர் நல்லாயிருந்தாலும், பத்தாயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது தான் நடந்து வருகிறது. நல்லாயிருப்பதாக நினைக்கும் அந்த பத்து பேரில் ஐந்து பேர் நல்லாயில்லை. நல்லாயிருப்பது போல நடிக்க வேண்டியிருக்கிறது. வட்டிக்கு வாங்கி, ஒட்டியாணம் வாங்கியவர் அதற்கு வட்டி கட்ட ஒட்டியாணத்தை விற்று கட்ட வேண்டிய நிலை தான் சினிமாவில் அதிகமாகி விட்டது. சங்கடப்படும் திரையுலகத்தினரை காப்பாற்ற யார் வருவார் என்றிருந்த நிலையில், முதல்வர் கருணாநிதி நிறைய சலுகைகளை வழங்கி திரையுலகத்தினரை காப்பாற்றியுள்ளார். எந்தக் குழந்தையும் அழுதால் தான் தாய் பால் கொடுப்பாள். திரையுலகத்தினர் அழாமலே பால் கொடுத்த தாய் கருணாநிதி.
பெரிய, பெரிய தயாரிப்பாளர்கள் கூட சினிமாவினால் எல்லாத்தையும் இழந்துள்ளனர். பெரிய நடிகராக, தயாரிப்பாளராக இருந்த அமிதாப் வீடு கூட ஒரு சமயத்தில் ஏலம் விடும் அளவிற்கு போனது. இந்த ரஜினி எம்மாத்திரம். அரசியல் வாதிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஜாதகம் மாறும். சினிமா இன்டஸ்டிரியில் உள்ளவங்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஜாதகம் மாறும்.
அரசியல் வாதிகள் எல்லாம் சினிமாக்காரர்களை விமர்சனம் செய்கின்றனர். ஒரு தலைவர் விமர்சனம் செய்யலாம். அவரோட வாலு விமர்சனம் செய்யலாம். வாலில் உள்ள முடிகூட விமர்சனம் செய்வதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
டெய்ல்பீஸ்: யப்பா நேற்று உங்களுக்கு அழாமலே பால் தந்தது "அம்மா". இன்று அப்பாவா?. இருந்தாலும் நாங்கள் "நடிகர்கள்" என்பதை புரியவைக்க இவ்வளவு தரம் இறங்கியிருக்க வேண்டாம்.
Sunday, September 24, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment