Thursday, September 28, 2006

தி.மு.க தேச விரோத சக்தி!

அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.வி.சண்முகத்திற்கு எதிராக சபாநாயகரிடம் 59 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்துள்ளனர். அம்மனுவில்,

"அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு மதுரை மேற்கு தொகுதியில் எஸ்.வி.சண்முகம் வெற்றி பெற்றார். தேச மற்றும் மக்கள் விரோத சக்தியாக அ.தி.மு.க.வால் கருதப்படும் தி.மு.க. கட்சியை சேர்ந்த அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர் அருகே எஸ்.வி.சண்முகம் அமர்ந்திருக்கிறார். அவரை சண்முகம் புகழ்ந்து பேசினார்.

இதுதொடர்பாக பிரச்சினை எழும்பிய போது, பத்திரிகைகளில் பல்வேறு கருத்துக்களை சண்முகம் தெரிவித்தார். ஒரு பத்திரிகையில், "சட்டசபையில் சுயேச்சையாக செயல்படுவேன். தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு கொடுப்பேன். அதன்மூலம் எனது தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்'' என்று சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.இதன்மூலம் சண்முகத்தின் செயல்பாடுகளும் பேச்சுகளும், அ.தி.மு.க.வின் உறுப்பினர் பதவியில் இருந்து தானாக முன்வந்து விலகுவதாக அறிவித்தது போல் உள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10-வது விதியில், "ஒரு அரசியல் கட்சியில் இருந்து தானாக முன்வந்து விலகுவதாக அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் கூறினால், அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கலாம்'' என்று கூறப்பட்டு உள்ளது.

கடந்த 12-ந் தேதியில் இருந்து எஸ்.வி.சண்முகத்தின் பேச்சு, செயல்பாடுகளை பார்க்கும் போது, அ.தி.மு.க. உறுப்பினர் பதவியில் இருந்து தானாக முன்வந்து விலகுவது போல் உள்ளது. எனவே, அவரை எம்.எல்.ஏ. பதவியை விட்டு நீக்க வேண்டும்." எனக் கோரப்பட்டுள்ளது.

டெய்ல்பீஸ்: ஒரு தனி மனிதன் தேசவிரோதியாக இருந்தால் அவனை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர சட்டம் வழிகோலுகிறது. ஆனால் ஒரு கட்சியே தேச விரோத கட்சியாக இருந்தால்.....! அதுவும் ஒரு மாநில ஆட்சியையே கையில் வைத்திருக்கும் கட்சியாக இருந்தால்....!இதைக் கேட்பார் யாருமே இல்லையா? சரி. தி.மு.க தேச விரோத சக்தி! எனில் அ.தி.மு.க என்னவாம்?

3 comments:

பரங்கியன் said...

//சரி. தி.மு.க தேச விரோத சக்தி! எனில் அ.தி.மு.க என்னவாம்? //

நச்ன்னு கேட்டிருக்கிறீங்கன்னு நிருபரே

பரங்கியன் said...

//சரி. தி.மு.க தேச விரோத சக்தி! எனில் அ.தி.மு.க என்னவாம்? //

நச்-ன்னு கேட்டிருக்கிறீங்க நிருபரே...

Anonymous said...

//சரி. தி.மு.க தேச விரோத சக்தி! எனில் அ.தி.மு.க என்னவாம்?//

அதை விரைவில் கருணாநிதி கூறுவார்.