Tuesday, December 05, 2006

நீதிமன்ற அவமதிப்பு: பால்தாக்கரேக்கு சம்மன்.

மும்பை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அடுத்த வருடம் பெப்ருவரி 8 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சிவசேனா தலைவர் பால்தாக்கரேக்கு தனிநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கறிஞர் முன்னா த்ருபாடி சமர்ப்பித்த பொதுமனுவை ஏற்றுக்கொண்டு ரெயில்வே நடமாடும் நீதிமன்ற மெட்ரோபாலிட்டன் நீதிபதி எம் பி டேட் சம்மன் அனுப்பினார். நீதிமன்றம் சம்மன் அனுப்பினாலும் தான் விரும்பும் சமயமே நீதிமன்றத்தில் ஆஜராவேன் என தாக்கரே கூறினார். வருடங்களுக்கு முன் சிவாஜி பூங்காவில் நடந்த ஒரு பொது பேரணியில் தாக்கரே பேசிய பேச்சுக்கள் நீதிமன்ற அவமதிக்கும் விதத்தில் இருந்தன. இதே வழக்கில் தாக்கரேக்கு இரு முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பிய போதிலும் சில உடல்பலவீனங்களை காரணம் காட்டி அவர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராவாமல் தட்டிக்கழித்துள்ளார்.

டெய்ல்பீஸ்: ஒரு சாமான்யனுக்கு இதே போன்று நீதிமன்றம் சம்மன் அனுப்பி, "நான் விரும்பும் நேரத்தில் தான் ஆஜராவேன்" என அவன் இவ்வாறு பகிரங்கமாக அறிக்கை விட்டால் அவன் நிலை என்னவாகும் என ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கிறேன். ம்ஹ்ம். பேசாமல் சிவசேனாவில் சேர்ந்து தலைவராகி விட்டால் என்ன?

Monday, December 04, 2006

கஞ்சா கடத்த முயன்ற சன்னியாசி கைது!

கோயம்புத்தூர்: டெல்லிக்கு கஞ்சா கடத்த முயன்ற சன்னியாசியை கோயம்புத்தூர் காவல்துறை கைது செய்தது. மதுரை-இராமேஸ்வரம் வழி புகைவண்டி மூலம் கோயம்பத்தூர் வந்து சேர்ந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நாராயணன் சவுத்ரி டெல்லி விமானத்தில் பயணிக்க இருக்கும் பொழுது விமானநிலையத்தில் வைத்து பிடிபட்டார். ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கோயம்புத்தூர் விமான நிலைய ஸ்பெஷல் போலீஸ் பிரிவு கஞ்சாகெட்டுகளுடன் சன்னியாசியை கையும் களவுமாக பிடித்தது. குமளி-தேனி பகுதிகளிலிருந்து இக்கஞ்சா கட்டுகள் சேகரிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்தது. தமிழகத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடும் சில பெருந்தலைகள் இவ்வழக்கில் பிடிபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர புலன்விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெய்ல்பீஸ்: என்னப்பா நீங்க இத்த எல்லாம் பெரிய்ய வெசயமாக்கிட்டு? அவாளு தான் அந்த கஞ்சா பெர்சனல் யூஸுக்குன்னு சொல்லிப்புட்டாவளே. அப்புறம் எதுக்கு வெசாரண எல்லாம்? அவகளுக்கு இதெல்லாம் என்ன பெரிய்ய வெசயமா? பொண்ணு பிசினஸ்ஸுல இருந்து ஆளயே போட்டுத்தள்ளுவது வரை அவகளுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம் தானுங்களே?

Sunday, December 03, 2006

இந்துக்கள் தடை செய்ததால் தலித்துகள் தனி கோவில்!

புவனேஸ்வர்: மேல் சாதி இந்துக்கள் தடை விதித்ததால், சொந்தமாக கோவிலை கட்டினர் தலித்துகள். அதில் பிராமண பூசாரியை அர்ச்சகராக நியமித்துள்ளனர். அக்கோயிலில் நுழைய இந்துக்கள் எல்லாரையும் அனுமதித்தும் வருகின்றனர்.

மற்ற மாநிலங்களை விட ஒரிசா மாநிலத்தில் தலித்துகளை மேல் சாதி இந்துக்கள், கோவில்களில் நுழைய விடாமல் தடுப்பது அதிகமாக உள்ளது. பல ஆண்டு வழக்கமாகவே, ஒரிசா மாநிலத்தில் மட்டும் எந்த மேல் சாதி இந்துக்கள் கோவில்களிலும், தலித் மக்கள் அனுமதிக்கப்பட்டதே இல்லை.

புவனேஸ்வரில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேந்த்ரபாடா பகுதியில் உள்ள பிரபல கோவில் ஜகந்நாதர் கோவில். அங்கு தலித்துகள் "நாங்கள் நுழைந்தே தீருவோம்" என்று சபதம் எடுத்துள்ளனர். ஆனால், அவர்களை அனுமதிக்க இந்துக்கள் மறுத்துவிட்டனர்.

இதை எதிர்த்து தலித்துகள் சார்பில் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. அதற்கு "நாங்கள் 18ம் நூற்றாண் டில் இருந்து இந்த நடைமுறையை கடைபிடித்து வருகிறோம். அதை தகர்க்கக் கூடாது" என்று இந்துக்கள் பதில் அளித்தனர். இந்நிலையில், கோவிலில் நுழைந்தே தீருவோம் என்று தயாராகிவிட்டனர் தலித் மக்கள். விரைவில் கோவிலில் நுழையத்தான் போகிறோம் என்று அவர்கள் அறிவித்ததால், கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே இது தொடர்பாக தொடர்ந்து பிரச்னைகள் இருந்து வந்ததால், மேல் சாதி இந்துக்களுக்கு பதிலடி தர, கேந்த்ரபாடா பகுதிக்கு வெளியே, சவுரிபெர்காம்பூர் என்ற பகுதியில் தலித்துகள் ஒன்று சேர்ந்த ஒரு கோவிலை கட்டினர். அந்த ஜகந்நாதர் கோவிலில், அர்ச்சகராக பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தினர். இப்போது அந்த கோவிலில் மேல் ஜாதி இந்துக்களையும் வழிபட அனுமதித்து வருகின்றனர் தலித்துகள். அந்த கோவிலில் தலித்துகள் அதிகம் வருவதில்லை என்பதும் அவர்கள் ஆதங்கம்.

டெய்ல்பீஸ்: இதற்குப் போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா? இந்துக்கள் கோயிலில் தங்களை அனுமதிக்கவில்லை எனில் தங்களுக்காக தனிக்கோயில் கட்டினால் முடிந்தது பிரச்சனை. இவ்வளவு இலகுவாக தீரவேண்டிய பிரச்சனையை திராவிட ராஸ்கல்களும், செத்துப்போன கம்யூனிஸவாதிகளும் ஊதிப்பெரிதாக்கி விட்டனர். இப்பொழுதாவது இந்த தாழ்த்தப்பட்ட பயல்களுக்கு புத்தி வந்ததே. இனி இந்து ஐக்கியம் ஓங்கும்?!

Saturday, November 11, 2006

யஹ்கூப் கொலை: இரண்டு ஆர்.எஸ்.எஸ் பிரதிகள் ஸரணடைந்தனர்.

மட்டன்னூர்: புன்னாடு ஸி.பி.எம் தொண்டர் கெ.கெ.யஹ்கூபை வெட்டிக் கொலை ஸெய்த வழக்கில் முதல் குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பௌதிக் ப்ரமுக் புன்னாட்டு விலங்கேரி ஸங்கரன் மாஸ்டர்(35) மற்றும் 11 ஆம் குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ் தொண்டர் தில்லங்கேரி தெக்கன் பொயிலில் காரக்குன்னு வீட்டில் பப்பன் என்ற பத்மஜன்(25) ஆகிய இருவரும் மட்டன்னூர் நீதிமன்றத்தில் ஸரணடைந்தனர். நேற்று ஸரணடைந்த இந்த இருவரையும் மட்டன்னூர் முதல் வகுப்பு நீதிபதி என்.கே.பிரகாஸன் இரண்டு வாரத்திற்கு ரிமாண்ட் ஸெய்ய உத்தரவிட்டார்.

கடந்த ஜூன் 13 அன்று இரவு 10 மணிக்கு புன்னாடு கோட்டத்து குன்னம் என்ற இடத்தில் வைத்து ஸங்கரனின் தலைமையில் 16 பேர் அடங்கிய குழு குண்டு வீஸியும், அரிவாளால் வெட்டியும் யஹ்கூபை கொலை ஸெய்தனர்.

இவ்வழக்கில் 16 பேர் மீது குற்றம் ஸுமத்தப்பட்டு வழக்கு பதிவு ஸெய்யப்பட்டது. இதில் இதுவரை 7 பேரை காவல்துறை கைது ஸெய்திருக்கிறது. மற்றும் ஏழு பேர் நீதிமன்றத்தில் ஸரணடைந்தனர். மற்ற இருவரான 16 ஆம் குற்றவாளி ரூஃபால் பாபு, 13 ஆம் குற்றவாளி ராஜேஷ் என்பவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

டெய்ல்பீஸ்:
ஸிபிஎம் ஆட்சியில் நாங்கள் இதை எதிர்பார்த்தது தான். அச்சுதானந்தன் ஆட்சிக்கட்டிலில் ஏறும் முன்னே தீவிர முஸ்லிம் ஆதரவாளராக இருந்து வந்தார். அதன் காரணமாகவே ஸமூக தொண்டு புரியும் எங்கள் அமைப்பின் தொண்டர்களை தேடிப்பிடித்து கைது செய்தும் இல்லாத குற்றங்கள் ஸுமத்தியும் களங்கமற்ற தெய்வீகமான எங்கள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக ஸித்தரிக்க முயன்று வருகிறார். அவர் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆதரவாளர். அதனாலேயே இது போன்ற வேலைகள் அவர் ஆட்சியில் நடக்கிறது. அடுத்த காங்கிரஸ் ஆட்சியின் போது இதற்கு நாங்கள் பதில் ஸொல்வோம்.

Saturday, September 30, 2006

எயிட்சை தடுக்க நீதிபதி புது யோசனை!

"கைதிகளை திருத்துதல், சீர்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு அளித்தல்" என்பது பற்றிய கருத்தரங்கு பெங்களூரில் நடந்தது. இதில் கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி வி.கோபால கவுடா கலந்து கொண்டு பேசினார். கைதிகளின் நலனை குறித்தும் அவர்களின் மறுவாழ்வைக் குறித்தும் நீதிபதி கூறும் பொழுது,

"சிறையில் உள்ள கைதிகள் நீண்ட காலமாக தங்களின் குடும்பத்தினரை பிரிந்து தனிமையில் வாழ வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு அவர்கள் ஆளாகின்றனர். இது அவர்களை ஓரின சேர்க்கை செய்ய தூண்டுகிறது. இதனால் கைதிகளிடையே எய்ட்ஸ் நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. இதனை தவிர்க்க, கைதிகளை பரோலில் விடவேண்டும்.

கைதிகள் தங்களது குடும்பத்தினர்களை அடிக்கடி சந்திக்க அனுமதிக்க வேண்டும்.சிறைகள் மற்றும் காவல்கூடங்களுக்கு அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எய்ட்ஸ் மற்றும் ஓரினசேர்க்கையால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள், மனநோய் ஆலோசகர்களை நியமிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்.இத்தகைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சமூகவியல் நிபுணர்களின் ஆலோசனையை நாடவேண்டும்." என்று நீதிபதி வி.கோபால கவுடா ஆலோசனை கூறினார்.

டெய்ல்பீஸ்: ஹைய்யா. ஜாலி தான். ஓசி சாப்பாடு, ஓசி தங்குமிடம், குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்ற தலை வேதனை இல்லை, அப்படியே குடும்பமும் நடத்திக் கொள்ளலாம். இனி நமக்கு ஒரே ஜாலி தான். நீதிபதி ஐயா அப்படியே தமிழ்நாட்டுல செயலலிதா அம்மா அறிவித்த இலவச நிரோத் மெஷின் ஒண்ணையும் ஜெயிலுக்குள்ள எங்களுக்கு வச்சுத் தரச்சொல்லிடுங்க ஐயா. உங்களுக்கு புண்ணியமா போகும்.

காவல்துறை Vs கூலிப்படை

சபரிமலை கோவில் தந்திரியாக இருந்தவர் திரு.கண்டரரு மோகனரு. இவரை 6 பேர் கொண்ட ஒரு கும்பல் கொச்சியில் உள்ள லிங்க் லட்சுமண் வளாக பிளாட் கட்டிடத்தில் அழகி சாந்தாவுடன் வைத்து ஆபாச படம் எடுத்ததாகவும், அந்த படங்களை வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதுடன், தனது நகை மற்றும் பணத்தை பறித்து சென்றதாகவும் தந்திரி மோகனரு அளித்த புகாரின் பேரில் போலீசார் அழகி ஷோபா, டிரைவர்கள் விஜில், அனில் குமார் மற்றும் பிஜி பீட்டர், அப்துல் சகத், ஆஷிப் ஆகியோரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் தந்திரியை ஆபாச படம் எடுத்ததாகக் கூறி, காசர்கோடு சிறுவத்தூரை சேர்ந்த போட்டோ கிராபர் அப்துல் சத்தாரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். "தந்திரி மோகனருவை அழகி சாந்தாவுடன் நான் தான் ஆபாச படம் எடுத்தேன்" என்று அப்துல் சத்தார் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களிடம் போலீசார் முன்னிலையில் கூறினார்.

இவரது புகைப்படத்தை செய்திகளில் பார்த்த கண்டரரு மோகனரு, "தன்னை ஆபாச படம் எடுத்தவர் அப்துல் சத்தார் அல்ல" என்று மறுத்துள்ளார். நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி அவர் கூறியதாவது:-

"அப்துல் சத்தாரின் படங்களை தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் பார்த்தேன். கொச்சி பிளாட் கட்டிடத்தில் என்னை மிரட்டி ஆபாச படம் எடுத்ததாக போலீசார் கைது செய்துள்ள போட்டோ கிராபர் அப்துல் சத்தார் உண்மையான குற்றவாளி அல்ல. அவர் என்னை படம் எடுக்கவில்லை."

"போலீசார் கைது செய்துள்ள போட்டோ கிராபர் அப்துல் சத்தார், சம்பவத்தன்று என்னை தாக்கி படம் எடுத்த கூலிப்படையினர் கூட்டத்தில் இருக்கவில்லை. அந்த கூலிப்படையினரை எங்கு பார்த்தாலும் என்னால் கண்டறிய முடியும். அப்துல் சத்தார் போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படும் தகவல்களும் உணமையல்ல. இந்த வழக்கை சில போலீஸ் அதிகாரிகள் திசைதிருப்பி விட்டுள்ளனர்." என்று திரு. கண்டரரு மோகனரு கூறினார்.

டெய்ல்பீஸ்: வரவர இந்த கண்டரரால் மிகப்பெரிய தலைவேதனையாகி விட்டது. எப்படியாவது இந்த வழக்கை முடித்து தலைசுற்றி வீசிவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என நினைத்தால் விட மாட்டார் போலிருக்கிறது. இவர் இடையிடையே இப்படி பேசுவதைப்பார்த்தால் கடைசியில் உண்மையான குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய நிலை வந்து விடும் போல் உள்ளதே. அவர்களை காட்டிக்கொடுத்து விட்டால் அதன் பின் நமக்கு படியளப்பது யாராம்?

Thursday, September 28, 2006

தி.மு.க தேச விரோத சக்தி!

அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.வி.சண்முகத்திற்கு எதிராக சபாநாயகரிடம் 59 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்துள்ளனர். அம்மனுவில்,

"அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு மதுரை மேற்கு தொகுதியில் எஸ்.வி.சண்முகம் வெற்றி பெற்றார். தேச மற்றும் மக்கள் விரோத சக்தியாக அ.தி.மு.க.வால் கருதப்படும் தி.மு.க. கட்சியை சேர்ந்த அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர் அருகே எஸ்.வி.சண்முகம் அமர்ந்திருக்கிறார். அவரை சண்முகம் புகழ்ந்து பேசினார்.

இதுதொடர்பாக பிரச்சினை எழும்பிய போது, பத்திரிகைகளில் பல்வேறு கருத்துக்களை சண்முகம் தெரிவித்தார். ஒரு பத்திரிகையில், "சட்டசபையில் சுயேச்சையாக செயல்படுவேன். தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு கொடுப்பேன். அதன்மூலம் எனது தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்'' என்று சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.இதன்மூலம் சண்முகத்தின் செயல்பாடுகளும் பேச்சுகளும், அ.தி.மு.க.வின் உறுப்பினர் பதவியில் இருந்து தானாக முன்வந்து விலகுவதாக அறிவித்தது போல் உள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10-வது விதியில், "ஒரு அரசியல் கட்சியில் இருந்து தானாக முன்வந்து விலகுவதாக அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் கூறினால், அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கலாம்'' என்று கூறப்பட்டு உள்ளது.

கடந்த 12-ந் தேதியில் இருந்து எஸ்.வி.சண்முகத்தின் பேச்சு, செயல்பாடுகளை பார்க்கும் போது, அ.தி.மு.க. உறுப்பினர் பதவியில் இருந்து தானாக முன்வந்து விலகுவது போல் உள்ளது. எனவே, அவரை எம்.எல்.ஏ. பதவியை விட்டு நீக்க வேண்டும்." எனக் கோரப்பட்டுள்ளது.

டெய்ல்பீஸ்: ஒரு தனி மனிதன் தேசவிரோதியாக இருந்தால் அவனை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர சட்டம் வழிகோலுகிறது. ஆனால் ஒரு கட்சியே தேச விரோத கட்சியாக இருந்தால்.....! அதுவும் ஒரு மாநில ஆட்சியையே கையில் வைத்திருக்கும் கட்சியாக இருந்தால்....!இதைக் கேட்பார் யாருமே இல்லையா? சரி. தி.மு.க தேச விரோத சக்தி! எனில் அ.தி.மு.க என்னவாம்?

Tuesday, September 26, 2006

கிளிண்டன் கூறியது சரியல்ல - ரைஸ்.

நியூயார்க் : அல் காயிதாவை அழிப்பதற்கு தான் தயார் செய்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதில் புஷ் அரசு தோல்வி அடைந்து விட்டது என்ற பில் கிளிண்டனின் அறிக்கை உண்மைக்கு புறம்பானது என கோண்டலீஸா ரைஸ் கூறினார்.

கடந்த ஞாயிறு அன்று ஃபோக்ஸ் சானலுக்கு வழங்கிய பேட்டியின் போது கிளிண்டன் இவாறு தெரிவித்திருந்தார். பின்லாடனை பிடிப்பதற்காக மிகச் சிறந்த திட்டம் ஒன்றை தயார் செய்தது நான் தான் என்பது தான் பில் கிளிண்டனின் வாதம். செப்.11 தாக்குதல் நடந்த காலத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ரைஸ் பணியாற்றிக் கொண்டிருந்தார். அல்காயிதாவின் செயல்பாட்டை முடக்குவதற்கான எவ்வித திட்டமும் அன்று தனக்கு கிடைக்கவில்லை என ரைஸ் நியூயார்க் டைம்ஸிற்கு அளித்த பேட்டியில் கூறினார். அவ்வாறெனில் கிளிண்டன் பொய் கூறுகிறாரா? என்ற கேள்விக்கு தான் அவ்வாறு கருதவில்லை என அவர் பதிலளித்தார்.

டெய்ல்பீஸ் : ஒருவேளை கிளிண்டன் தயார் செய்த அந்த திட்டம் அடங்கிய கோப்பு லெவின்ஸ்கியின் குளியலறையிலை விட்டு வெளிவரவில்லையோ என்னமோ. எதற்கும் கிளிண்டன் ஒருமுறை லெவின்ஸ்கியின் படுக்கையறையில் அக்கோப்பை தேடிப்பார்த்து உறுதி செய்து கொள்ளட்டும்.

இரண்டு வயது குழந்தை நரபலி!

ஹரித்வார்: கடவுளிடமிருந்து வரம் பெறுவதற்காக தனது இரண்டு வயது குழந்தையை தாய் நரபலி கொடுத்தார். ஹரித்வாரிலுள்ள ஒரு கோயில் நடையில் வைத்து குரூரமான இச்சம்பவம் நடைபெற்றது. ஸஹரண்பூர் மாவட்டம் ஜக்தாய் என்ற கிராமத்தில் உள்ள ப்ரமாள என்ற பெண் கோயில் நடையில் தனது மகளின் தலையை வீசி அடித்து தான் பூஜிக்கும் தேவதைக்கு பலி அற்பித்தார்.

பின்னர் மகளின் உடலிலிருந்து பீய்ச்சி அடித்த இரத்தத்தை ப்ரமீள தேவதைக்கு சமர்ப்பித்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

டெய்ல்பீஸ்: பக்தன் - வரம் - நரபலி - கடவுள். நல்ல பண்டமாற்று.

DYFI தொண்டரை ஆர்.எஸ்.எஸினர் வெட்டிக் கொன்றனர்.



கொடுங்கல்லூர்: பொழங்காவ் செம்பனேழத்து(செம்பநாடன்) ராஜு(35) என்ற DYFI தொண்டரை இரவு 2 மணிக்கு வீடுபுகுந்து வெட்டிக் கொன்றனர். இவர் தனது மனைவியின் சகோதரி வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்த பொழுது இந்த அசம்பாவிதம் நடந்தது. மேற்கு வெம்பல்லூர் அம்பலத்திற்கு சமீபமுள்ள இவரின் மனைவியின் சகோதரி வீட்டுக்கு வந்திருந்த பொழுது இச்சம்பவத்தை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் செய்ததாக இருங்காலக்குட DSP சசிக்குமார் கூறினார்.

சசிகுமாரை கொலைசெய்ய முயன்றவர்களை தடுக்க முனைந்த பொழுது அவரின் மனைவி சந்தியாவிற்கு(24) வெட்டுபட்டு கைவிரல்கள் துண்டாகி இருந்தன. அவர் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சசிக்குமார் கொலையைத் தொடர்ந்து இடது முன்னணி கொடுங்கல்லூரில் இன்று கடை அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை கடையடைப்பு நடைபெறும்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை மனைவியின் சகோதரி வீட்டில் விருந்துக்காக வந்த சசிக்குமாரை கொல்ல திங்கள் காலை 2 மணியளவில் ஒரு கூட்டம் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அவரின் வீட்டு கதவை உடைத்து திறந்தனர். தடுக்க வந்த சசிக்குமாரின் மனைவி சகோதரியையும் அவரின் கணவரையும் கழுத்தில் வாள், வீச்சரிவாள் போன்றவற்றை வைத்து மிரட்டி வைத்தனர். பின்னர் சசிக்குமார் தூங்கிக் கொண்டிருந்த அறைக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சசிக்குமாரின் கை கால்களை தனித்தனியாக வெட்டி எடுத்தனர். பின்னர் அவர் துடி துடித்துக் கொண்டிருக்கவே அவரின் விலா பக்கமிருந்து நீண்ட வாளை குத்தி ஏற்றினர்.

அவரின் சக தொண்டர்கள் செய்தி அறிந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மரண செய்தி கிடைத்தவுடன் அப்பகுதியில் கடைகளை அடைக்க DYFI தொண்டர்கள் கோரினர். வாகனப்போக்குவரத்தையும் தடுத்து நிறுத்தினர். இதனிடையே இரு பேருந்தும் ஒரு காரும் அவர்கள் கல்லெறிந்து தகர்த்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

டெய்ல்பீஸ்: சாயபுவின் கறிக்கடையில் இவர்கள் பரிசீலனை எடுத்திருப்பார்களோ. கை, கால் என தனித்தனியாக ஆடு, மாடுகளை விற்பனைக்கு வெட்டி எடுப்பதை போல் வெட்டி எடுத்துள்ளனரே!

Monday, September 25, 2006

மானபங்க வழக்கு: நடிகர் கோவிந்தாவின் உறவினர் கைது.

ஒரு பெண்ணை மானபங்கப்படுத்திய வழக்கில் பிரபல பாலிவுட் நடிகனும் பாராளுமன்ற எம்.பியுமான நடிகர் கோவிந்தாவின் சகோதரன் மகன் ஜன்மேந்திரா அஹூஜாவை காவல்துறை கைது செய்தது. இவருடன் மூன்று நண்பர்களும் காவல்துறை பிடியில் உள்ளனர். மஹாராஷ்டிரா சிவில் சப்ளைஸ் அமைச்சராக இருக்கும் சுனில் தத்கரின் அந்தரங்க உதவியாளராக பணிபுரியும் தயானந்த் சிங்கோலிகரின் மனைவி சீமா சிங்கோலிகரை ஜன்மேந்திரா மற்றும் அவரின் மூன்று நண்பர்கள் இணைந்து மானபங்கப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் 20 ஆம் தேதி இரவு ஜூஹு கடற்கரையில் தயானந்தும் அவர் மனைவியும் அமர்ந்திருக்கும் பொழுது சம்பவம் நடைபெற்றதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. ஜன்மேந்திராவும் நண்பர்களும் தயானந்தின் மனைவியை மானபங்கப்படுத்த முயலும் பொழுது தடுக்க வந்த தயானந்தை கொடூரமாக தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜன்மேந்திரா சினிமா தயாரிப்பாளர் கீர்த்தி அஹூஜாவின் மகன் ஆவார். ஜன்மேந்திராவையும் அவர் கூட்டாளிகளையும் இம்மாதம் 27 ஆம் தேதி வரை காவல்துறை கஷ்டடியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெய்ல்பீஸ்: நடிகர் கொவிந்தாவின் புகழை கெடுத்து அவருக்கு அவப்பெயர் உருவாக்க எதிர்கட்சியினர் செய்த சதியாக இருக்கும். காவல்துறையும் நீதித்துறையும் அதற்கு துணைப்போவது வெட்கக்கேடு!

Sunday, September 24, 2006

சூடானுக்கு சூடு.

ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப்படையை சூடானிலுள்ள தர்பூரில் அனுப்புவதற்கான பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை சூடான் அங்கீகரிக்கவில்லை எனில் அதற்கான தண்டனையை சூடான் அனுபவிக்க வேண்டி வரும் என அமெரிக்காவின் ஸ்டேட் செக்ரட்டரி கோண்டலீஸா ரைஸ் சூடானுக்கு மிரட்டல் விடுத்தார்.

சூடானுக்கு தண்டனை வழங்க ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளியே மற்ற வழிகளை கைக்கொள்வோம் எனவும் கூறினார். இதற்காக மற்ற நாடுகளின் பின் துணையையும் அவர் கோரினார். ஐக்கிய நாடுகள் சபையின் பொது கவுன்ஸில் கூடிய இடத்தில் இடையே இவ்வாறு ரைஸ் சூடானுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தார்.

டெய்ல்பீஸ்: பின்னர் ஐக்கிய நாடுகள் சபை என ஒன்று எதற்கு? நேரடியாக அமெரிக்க நாட்டின் சபை என மாற்றி விடவேண்டியது தானே?

அழாமலே பால் கொடுக்கும் தாய் கருணாநிதி - ரஜினி காந்த்.

சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: சினிமா இன்டஸ்டிரியில் திண்டாட்டம் தான் அதிகம். பத்து பேர் நல்லாயிருந்தாலும், பத்தாயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது தான் நடந்து வருகிறது. நல்லாயிருப்பதாக நினைக்கும் அந்த பத்து பேரில் ஐந்து பேர் நல்லாயில்லை. நல்லாயிருப்பது போல நடிக்க வேண்டியிருக்கிறது. வட்டிக்கு வாங்கி, ஒட்டியாணம் வாங்கியவர் அதற்கு வட்டி கட்ட ஒட்டியாணத்தை விற்று கட்ட வேண்டிய நிலை தான் சினிமாவில் அதிகமாகி விட்டது. சங்கடப்படும் திரையுலகத்தினரை காப்பாற்ற யார் வருவார் என்றிருந்த நிலையில், முதல்வர் கருணாநிதி நிறைய சலுகைகளை வழங்கி திரையுலகத்தினரை காப்பாற்றியுள்ளார். எந்தக் குழந்தையும் அழுதால் தான் தாய் பால் கொடுப்பாள். திரையுலகத்தினர் அழாமலே பால் கொடுத்த தாய் கருணாநிதி.

பெரிய, பெரிய தயாரிப்பாளர்கள் கூட சினிமாவினால் எல்லாத்தையும் இழந்துள்ளனர். பெரிய நடிகராக, தயாரிப்பாளராக இருந்த அமிதாப் வீடு கூட ஒரு சமயத்தில் ஏலம் விடும் அளவிற்கு போனது. இந்த ரஜினி எம்மாத்திரம். அரசியல் வாதிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஜாதகம் மாறும். சினிமா இன்டஸ்டிரியில் உள்ளவங்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஜாதகம் மாறும்.

அரசியல் வாதிகள் எல்லாம் சினிமாக்காரர்களை விமர்சனம் செய்கின்றனர். ஒரு தலைவர் விமர்சனம் செய்யலாம். அவரோட வாலு விமர்சனம் செய்யலாம். வாலில் உள்ள முடிகூட விமர்சனம் செய்வதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

டெய்ல்பீஸ்: யப்பா நேற்று உங்களுக்கு அழாமலே பால் தந்தது "அம்மா". இன்று அப்பாவா?. இருந்தாலும் நாங்கள் "நடிகர்கள்" என்பதை புரியவைக்க இவ்வளவு தரம் இறங்கியிருக்க வேண்டாம்.

இனிய ஆரம்பம்!

ரசிக்க உலகில் ஆயிரம் இருக்கலாம். எனினும் தினமும் காலையில் நாட்டு நடப்புகளை அறிய பத்திரிக்கைகளை திறப்பதே என்னில் ரசிக்கத்தக்க மிகச் சிறந்த செயலாக கருதுகிறேன். அச்செய்திகளை குறித்து அலசுவதே இவ்வலைப்பூவின் நோக்கம்.

பத்திரிக்கைகளில் வந்த வராத, சமூகத்தில் பாரிய விளைவுகளை, எதிர்கால சமூகத்தை பாதிக்கும் செய்திகளை தொடர்ந்து இங்கு காணலாம்.

விரைவில் நல்ல செய்தியுடன் வருகிறேன்.

நன்றி - வணக்கம்.