Tuesday, December 05, 2006

நீதிமன்ற அவமதிப்பு: பால்தாக்கரேக்கு சம்மன்.

மும்பை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அடுத்த வருடம் பெப்ருவரி 8 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சிவசேனா தலைவர் பால்தாக்கரேக்கு தனிநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கறிஞர் முன்னா த்ருபாடி சமர்ப்பித்த பொதுமனுவை ஏற்றுக்கொண்டு ரெயில்வே நடமாடும் நீதிமன்ற மெட்ரோபாலிட்டன் நீதிபதி எம் பி டேட் சம்மன் அனுப்பினார். நீதிமன்றம் சம்மன் அனுப்பினாலும் தான் விரும்பும் சமயமே நீதிமன்றத்தில் ஆஜராவேன் என தாக்கரே கூறினார். வருடங்களுக்கு முன் சிவாஜி பூங்காவில் நடந்த ஒரு பொது பேரணியில் தாக்கரே பேசிய பேச்சுக்கள் நீதிமன்ற அவமதிக்கும் விதத்தில் இருந்தன. இதே வழக்கில் தாக்கரேக்கு இரு முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பிய போதிலும் சில உடல்பலவீனங்களை காரணம் காட்டி அவர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராவாமல் தட்டிக்கழித்துள்ளார்.

டெய்ல்பீஸ்: ஒரு சாமான்யனுக்கு இதே போன்று நீதிமன்றம் சம்மன் அனுப்பி, "நான் விரும்பும் நேரத்தில் தான் ஆஜராவேன்" என அவன் இவ்வாறு பகிரங்கமாக அறிக்கை விட்டால் அவன் நிலை என்னவாகும் என ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கிறேன். ம்ஹ்ம். பேசாமல் சிவசேனாவில் சேர்ந்து தலைவராகி விட்டால் என்ன?

No comments: