Sunday, April 01, 2007

சொத்து, குழந்தை வேண்டுமா?



வாரணாசி: அபிஷேக் ஐஸ்வர்யா ஜோடியின் திருமண வாழ்க்கை சந்தோசமாக அமைவதற்காக உ.பி.,யில் ஒருவர் சூடான பாலில் குளியல் போட்டு கடவுளிடம் வேண்டினார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் மகன் அபிஷேக் பச்சனுக்கும், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தங்கள் திருமண வாழ்க்கை நல்லபடியாக அமைவதற்காக அவர்கள் இருவரும் பல்வேறு கோவில்களில் பூஜை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், உத்தர பிரதேசம் வாரணாசியில் வித்தியாசமான வேண்டுதல் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாரணாசி சிவ்பூர் பகுதியை சேர்ந்தவர் பானி பகத் (50). இவரது முன்னோர்கள் சப்தசாகர் என்ற இடத்தில் உள்ள துர்கா கோவிலில் சாமியாடி வந்தனர். தற்போது பானி பகத்தும் சாமியாடி வருகிறார். சாமியாடுபவர் உடலில் துர்கா தேவி தங்கி இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, ஆண்டுதோறும் நடக்கும் பூஜையின்போது சாமியாடுபவர் மீது கொதிக்கும் பாலை அபிஷேகம் செய்தால் துர்கா தேவிக்கே அபிஷேகம் செய்வதாகவும் அதன் மூலமாக நினைத்த காரியம் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை. அதன்படி துர்கா கோவிலில் தற்போது சாமியாடி வரும் பகத் மீது சூடான பாலை ஊற்றி மக்கள் பிரார்த்தøனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோவில் விழாவில் அபிஷேக் ஐஸ் தம்பதி வளமுடன் வாழ்வதற்காக நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது, துர்கா தேவியின் அருளை பெற்று சாமியாடிக் கொண்டிருந்த பகத் மீது சூடான பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். சிறப்பு பூஜையுடன் மேள தாளங்கள் முழங்க நெய் மற்றும் பாலாடை போன்றவையும் பகத் மீது ஊற்றி துர்கா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இது குறித்து பகத் கூறுகையில், ""துர்கா தேவியின் அருளை பெறுவதற்காக எனது முன்னோர்கள் காலம் முதலே கடந்த அறுநுõறு ஆண்டுகளாக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இதற்கு "குவால்பால் பூஜை' என்று பெயர். இந்த பூஜை மூலமாக சொத்து, குழந்தைகள் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான வசதிகள் மட்டுமன்றி கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையும் கிடைக்கும்,'' என்றார்.

சிறப்பு பூஜைக்கான விழா அமைப்பாளர் ஒருவர் கூறுகையில், "பானி பகத் மற்றும் சிலர் ஒட்டு மொத்த தேசத்தின் சுபிட்சத்துக்காக சூடான பால் அபிஷேகம் நடத்தி வருகின்றனர். அபிஷேக் ஐஸ்வர்யா திருமணத்துக்காக இந்த ஆண்டு கூடுதலாக ஒரு பூஜை நடத்தி தருமாறு நாங்கள் கேட்டு கொண்டோம்,'' என்றார்.

நன்றி: தினமலர்(http://dinamalar.com/ 02/04/2007)

டெய்ல்பீஸ்: யாராவது அந்த அவதாரப்புருஷரை இங்கேயும் சற்று அனுப்பி வையுங்கள். யார் அது? பில் கேட்ஸா பூட்ஸா? அந்த ஆளுக்கு இருப்பதைப் போன்று நமக்கும் சொத்து வேண்டும் என ஆவலாய் உள்ளது. அப்படியே குழந்தை இல்லாமல் நம்ம பக்கம் நிறைய பேர் உள்ளனர். போனாப் போவுது கொஞ்சம் பால் தானே? நமக்கு சொத்தும், குழந்தைகளும் கிடைத்தால் சரி தான். ஆமாம் கேட்க மறந்து விட்டேன். அந்த ஆளுக்கு மேல "சூடான பால" ஊற்றியதா நம்ம தினமலர் புருசர்கள் தலைப்பு செய்தி போட்டிருக்காவளே? சூடான பால்னா எப்படி? ஒரு 100 டிகிரி சூடு இருக்குமா?

1 comment:

துளசி கோபால் said...

பால் குளியலா?

கிளியோபாத்ரன்?