Sunday, February 25, 2007

இராணுவ அதிகாரியை முட்டாளாக்கும் இராணுவ அமைச்சர்!


ஜெரூசலம்: இஸ்ரேல் இராணுவ அமைச்சர் அமீர் பெரட்ஸ் இராணுவ சாகசங்களை அடைப்பு திறக்கப்படாத தொலை நோக்கு கருவி மூலம் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக கண்டுகளித்தார். கோலான் குன்றுகளில் வைத்து நடத்திய இஸ்ரேலிய இராணுவத்தினரின் சாகச நிகழ்ச்சிகளை புதிய இராணுவ தலைமை அதிகாரி ஜனரல் காபி அஷ்கனாசியுடன் இணைந்து இஸ்ரேல் இராணுவத்தின் திறமையை உன்னிப்பாக மதிப்பீடு செய்யும் இராணுவ அமைச்சர் அமீர் பெரட்ஸின் படங்களை இஸ்ரேலிய பத்திரிக்கைகள் வெளியிட்டன.

இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் காபியின் விளக்கங்கள் அனைத்திற்கும் லென்ஸ் திறக்காத தொலைநோக்குக் கருவியின் மூலமாக பார்த்துக் கொண்டே தலையாட்டிக் கொண்டிருக்கும் இராணுவ அமைச்சர் பெரட்ஸின் புகைப்படங்களை அனேகமாக இஸ்ரேலின் அனைத்து பத்திரிக்கைகளும் வெளியிட்டிருந்தன.

இப்புகைபடங்களை வெளியிட்ட பத்திரிக்கைகளின் புகைப்பட நிபுணர்கள், அமைச்சர் இவ்வாறு மூன்று முறை லென்ஸை திறக்காமலேயே தொலைநோக்கியின் மூலமாக பார்த்துக் கொண்டே இராணுவ அதிகாரியின் விளக்கங்களை கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.

தொலை நோக்கியின் லென்ஸை திறக்காமலேயே அனைத்தையும் தான் கவனமாக பார்வையிடுவதாக வெளிக்காட்டும் விதத்தில் வெறுமனே தொலைநோக்கியை கண்ணில் வைத்து இராணுவத்தினரையும், மக்களையும் இஸ்ரேலிய இராணுவ அமைச்சர் இவ்வாறு ஏமாற்றுவதற்கும் முன்னரே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷும், இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஏரியல் ஷாரோனும் இதேபோன்று இராணுவத்தினரையும் மக்களையும் ஏமாற்றியுள்ளனர்.

அந்த வகையில் இஸ்ரேலின் இராணுவ அமைச்சர் அவர்களுக்குப் பின் இவ்விஷத்தில் தற்போது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

டெய்ல்பீஸ்: உலகின் அமைதிக்கு எல்லா வகையிலும் சவாலாக விளங்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகளின் அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் குருட்டுத் தனமானவை தான் என்பதை அவர்கள் இவ்வாறு மறைமுகமாக மக்களுக்கு தெரிவிக்கின்றனரோ என்னமோ?

Saturday, February 03, 2007

காதலர்களுக்கு எதிராக விசுவ இந்து பரிசத்!

அகமதாபாத்: குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் பூங்கா ஒன்றில் பேசிக் கொண்டிருந்த இளம் காதல் ஜோடிகளை விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த பெண் தொண்டர்கள் பிரம்பால் அடித்து விரட்டியடித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் சில மாதங்களுக்கு முன் இளம் ஜோடிகளை போலீசார் மிரட்டிய செயல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் எஸ்.ஐ உட்பட இரண்டு காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் அகமதாபாத் பூங்காவில் இது போன்ற சம்பவம் நேற்று நடைபெற்றது. இம்முறை போலீசுக்கு பதிலாக விசுவ இந்து பரிசத் அமைப்பினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு இந்த அத்துமீறல் வேளையில் இறங்கினர்.

நேற்று மாலை கையில் பிரம்பு மற்றும் ஹர்க்கி மட்டைகளுடன் 50க்கும் மேற்பட்ட விசுவ இந்து பரிஷத் தொண்டர்கள் (பெண்கள் உட்பட) பூங்காவுக்குள் நுழைந்தனர். கண்ணில் கண்ட காதல் ஜோடிகளை பிரம்பால் அடித்து விரட்டினர். இது குறித்து பெண் தொண்டர் ஒருவர் கூறுகையில், பெண்களை போகப்பொருளாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஆண்களை இந்த சமூகத்திலிருந்து விரட்டியடிக்க விரும்புகிறோம் என்றார்.

பிரம்படி வாங்கிய பெண் ஒருவர் கூறுகையில், எனது காதலருக்கு அடி விழுந்தது. தடுக்க போன எனக்கும் 4 பிரம்படி விழுந்தது. எனக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்றார்.

விசுவ இந்து பரிஷத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்னால் பாபு பஜ்ரங்ஜி என்ற விஎச்பி தலைவர் இருப்பதாக கூறப்படுகிறது. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற மதகலவரம் தொடர்பாக பல வழக்குகள் இவர் மீது உள்ளன.

டெய்ல்பீஸ்: பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்த பொழுது அதனை நேரில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த இரு பிரம்மச்சாரிய இளம்(!) காதலர்கள் கட்டியணைத்து முத்தங்களை சீ.. வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனரே. அது ஏன்? நம்ம ஜோஷி அய்யாவின் ப்ளேபாய் விளையாட்டுக்கள் சிடியாக பாஜகவின் வெள்ளிவிழா மாநாட்டிலேயே வலம்வந்ததே? இந்த காமகளியாட்ட நாயகர்களை சமூகத்திலிருந்து அடித்து விரட்ட எப்பொழுது வி.இ.ப கையில் ஹாக்கி மட்டை எடுக்கப்போகிறார்களாம்?