Tuesday, December 05, 2006

நீதிமன்ற அவமதிப்பு: பால்தாக்கரேக்கு சம்மன்.

மும்பை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அடுத்த வருடம் பெப்ருவரி 8 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சிவசேனா தலைவர் பால்தாக்கரேக்கு தனிநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கறிஞர் முன்னா த்ருபாடி சமர்ப்பித்த பொதுமனுவை ஏற்றுக்கொண்டு ரெயில்வே நடமாடும் நீதிமன்ற மெட்ரோபாலிட்டன் நீதிபதி எம் பி டேட் சம்மன் அனுப்பினார். நீதிமன்றம் சம்மன் அனுப்பினாலும் தான் விரும்பும் சமயமே நீதிமன்றத்தில் ஆஜராவேன் என தாக்கரே கூறினார். வருடங்களுக்கு முன் சிவாஜி பூங்காவில் நடந்த ஒரு பொது பேரணியில் தாக்கரே பேசிய பேச்சுக்கள் நீதிமன்ற அவமதிக்கும் விதத்தில் இருந்தன. இதே வழக்கில் தாக்கரேக்கு இரு முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பிய போதிலும் சில உடல்பலவீனங்களை காரணம் காட்டி அவர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராவாமல் தட்டிக்கழித்துள்ளார்.

டெய்ல்பீஸ்: ஒரு சாமான்யனுக்கு இதே போன்று நீதிமன்றம் சம்மன் அனுப்பி, "நான் விரும்பும் நேரத்தில் தான் ஆஜராவேன்" என அவன் இவ்வாறு பகிரங்கமாக அறிக்கை விட்டால் அவன் நிலை என்னவாகும் என ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கிறேன். ம்ஹ்ம். பேசாமல் சிவசேனாவில் சேர்ந்து தலைவராகி விட்டால் என்ன?

Monday, December 04, 2006

கஞ்சா கடத்த முயன்ற சன்னியாசி கைது!

கோயம்புத்தூர்: டெல்லிக்கு கஞ்சா கடத்த முயன்ற சன்னியாசியை கோயம்புத்தூர் காவல்துறை கைது செய்தது. மதுரை-இராமேஸ்வரம் வழி புகைவண்டி மூலம் கோயம்பத்தூர் வந்து சேர்ந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நாராயணன் சவுத்ரி டெல்லி விமானத்தில் பயணிக்க இருக்கும் பொழுது விமானநிலையத்தில் வைத்து பிடிபட்டார். ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கோயம்புத்தூர் விமான நிலைய ஸ்பெஷல் போலீஸ் பிரிவு கஞ்சாகெட்டுகளுடன் சன்னியாசியை கையும் களவுமாக பிடித்தது. குமளி-தேனி பகுதிகளிலிருந்து இக்கஞ்சா கட்டுகள் சேகரிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்தது. தமிழகத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடும் சில பெருந்தலைகள் இவ்வழக்கில் பிடிபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர புலன்விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெய்ல்பீஸ்: என்னப்பா நீங்க இத்த எல்லாம் பெரிய்ய வெசயமாக்கிட்டு? அவாளு தான் அந்த கஞ்சா பெர்சனல் யூஸுக்குன்னு சொல்லிப்புட்டாவளே. அப்புறம் எதுக்கு வெசாரண எல்லாம்? அவகளுக்கு இதெல்லாம் என்ன பெரிய்ய வெசயமா? பொண்ணு பிசினஸ்ஸுல இருந்து ஆளயே போட்டுத்தள்ளுவது வரை அவகளுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம் தானுங்களே?

Sunday, December 03, 2006

இந்துக்கள் தடை செய்ததால் தலித்துகள் தனி கோவில்!

புவனேஸ்வர்: மேல் சாதி இந்துக்கள் தடை விதித்ததால், சொந்தமாக கோவிலை கட்டினர் தலித்துகள். அதில் பிராமண பூசாரியை அர்ச்சகராக நியமித்துள்ளனர். அக்கோயிலில் நுழைய இந்துக்கள் எல்லாரையும் அனுமதித்தும் வருகின்றனர்.

மற்ற மாநிலங்களை விட ஒரிசா மாநிலத்தில் தலித்துகளை மேல் சாதி இந்துக்கள், கோவில்களில் நுழைய விடாமல் தடுப்பது அதிகமாக உள்ளது. பல ஆண்டு வழக்கமாகவே, ஒரிசா மாநிலத்தில் மட்டும் எந்த மேல் சாதி இந்துக்கள் கோவில்களிலும், தலித் மக்கள் அனுமதிக்கப்பட்டதே இல்லை.

புவனேஸ்வரில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேந்த்ரபாடா பகுதியில் உள்ள பிரபல கோவில் ஜகந்நாதர் கோவில். அங்கு தலித்துகள் "நாங்கள் நுழைந்தே தீருவோம்" என்று சபதம் எடுத்துள்ளனர். ஆனால், அவர்களை அனுமதிக்க இந்துக்கள் மறுத்துவிட்டனர்.

இதை எதிர்த்து தலித்துகள் சார்பில் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. அதற்கு "நாங்கள் 18ம் நூற்றாண் டில் இருந்து இந்த நடைமுறையை கடைபிடித்து வருகிறோம். அதை தகர்க்கக் கூடாது" என்று இந்துக்கள் பதில் அளித்தனர். இந்நிலையில், கோவிலில் நுழைந்தே தீருவோம் என்று தயாராகிவிட்டனர் தலித் மக்கள். விரைவில் கோவிலில் நுழையத்தான் போகிறோம் என்று அவர்கள் அறிவித்ததால், கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே இது தொடர்பாக தொடர்ந்து பிரச்னைகள் இருந்து வந்ததால், மேல் சாதி இந்துக்களுக்கு பதிலடி தர, கேந்த்ரபாடா பகுதிக்கு வெளியே, சவுரிபெர்காம்பூர் என்ற பகுதியில் தலித்துகள் ஒன்று சேர்ந்த ஒரு கோவிலை கட்டினர். அந்த ஜகந்நாதர் கோவிலில், அர்ச்சகராக பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தினர். இப்போது அந்த கோவிலில் மேல் ஜாதி இந்துக்களையும் வழிபட அனுமதித்து வருகின்றனர் தலித்துகள். அந்த கோவிலில் தலித்துகள் அதிகம் வருவதில்லை என்பதும் அவர்கள் ஆதங்கம்.

டெய்ல்பீஸ்: இதற்குப் போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா? இந்துக்கள் கோயிலில் தங்களை அனுமதிக்கவில்லை எனில் தங்களுக்காக தனிக்கோயில் கட்டினால் முடிந்தது பிரச்சனை. இவ்வளவு இலகுவாக தீரவேண்டிய பிரச்சனையை திராவிட ராஸ்கல்களும், செத்துப்போன கம்யூனிஸவாதிகளும் ஊதிப்பெரிதாக்கி விட்டனர். இப்பொழுதாவது இந்த தாழ்த்தப்பட்ட பயல்களுக்கு புத்தி வந்ததே. இனி இந்து ஐக்கியம் ஓங்கும்?!