Wednesday, December 03, 2008

தாய்லாந்து ஆட்சியை நீதிமன்றம் கலைத்தது!

தாய்லாந்து ஆளும் கட்சியில் அங்கமாக உள்ள மூன்று முக்கிய கட்சிகளை நிதிமன்றம் கலைத்து விட்டது. மேலும் பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் ஐந்து ஆண்டுகள் அரசியலில் ஈடுபட தடையும் பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து எதிர்கட்சிகளின் போராட்டத்தால் இக்கட்டில் தவிக்கும் ஸோமசாய் வோங்ஸ்வாத் தலைமையிலான அரசு கவிழும்.

2007 நவம்பரில் நடந்தத் தேர்தலில் ஊழல் மற்றும் சட்டமீறல் நடைபெற்றதற்காக நீதிமன்றம் இந்நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கும் மேலாக எதிர்கட்சிகள் நடத்தி வந்த விமானநிலைய மறியலை இன்று விலக்கிக் கொள்ளும் என அறிவித்தன.

இந்தியா கோரிய குற்றவாளிகளைக் கையளிக்க இயலாது - பாகிஸ்தான்!.

மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று கூறி இந்தியா பாகிஸ்தானிடம் வழங்கிய பட்டியலில் உள்ளவர்களை இந்தியாவிற்குக் கைமாற இயலாது என பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி அறிவித்துள்ளார்.

இந்தியா வழங்கிய ஆதாரங்கள் அதற்குப் போதுமானதாக இல்லை எனவும் அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.